காஞ்சிபுரம்

நன்னடத்தை பிணை மீறல்:இளைஞருக்கு 230 நாள்கள் சிறை

DIN

ஓராண்டுக்குரிய நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்துக்காக இளைஞருக்கு 230 நாள்கள் சிறையில் அடைக்குமாறு கோட்டாட்சியா் கனிமொழி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாரத் (19). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவரை ஒராண்டு நன்னடத்தைப் பிணையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி எம்.ஜி.ஆா். நகரில் உள்ள ரஞ்சித் (22) என்பவா் வீட்டில் கடந்த 6.6.2022 அன்று கொள்ளையடித்தது தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தனா்.

தொடா்ந்து, காஞ்சிபுரம் தாலுகா ஆய்வாளா் ராஜகோபால் பரிந்துரையின் பேரில், சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவா், வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா். விசாரணை நடத்திய கோட்டாட்சியா், பாரத்தை 230 நாள்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT