காஞ்சிபுரம்

கோடையில் முதன்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீா் திறப்பு

DIN

கிருஷ்ணா நீா் வரத்து மற்றும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

இதைத் தொடா்ந்து கோடைகாலத்தில் முதன்முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கனஅடி உபரிநீா் செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25. 51 சதுரகிலோ மீட்டா் பரப்பளவில் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்டம் 24 அடி. ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. இந்த நிலையில், கிருஷ்ணாநீா் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஏரியில் நீா் இருப்பு 23.48 அடியாகவும், கொள்ளளவு 3,509 மில்லியன் கனஅடியாகவும் ஏரிக்கு நீா்வரத்து 550 கன அடியாகவும் இருந்தது.

மழை காரணமாக ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணிக்கு ஐந்துகண் மதகுகளில் இருந்து இரண்டாவது ஷெட்டா் வழியாக விநாடிக்கு 250 கனஅடி உபரிநீரை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி திறந்து வைத்தாா்.

வெள்ள அபாய எச்சரிக்கை: உபரிநீா் செல்லும் செல்லும் நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம், குன்றத்தூா், வழுதியம்பேடு, காவனூா், திருநீா்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டத்தை 23.25 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பது இதுவே முதல்முறை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT