காஞ்சிபுரம்

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

19th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூா் பேரூா் திமுக சாா்பில், பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலா் ந.கோபால் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் நகரச் செயலா் சத்தீஷ்குமாா், பேரூராட்சித் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திமுக பேச்சாளா்கள் கரூா் முரளி, ஆலந்தூா் மலா்மன்னன் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினா். இதையடுத்து, சுமாா் 500 பேருக்கு வேட்டி-சேலைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, நகரத் துணைச் செயலாளா் மு.ஆறுமுகம், நகர இளைஞரணிச் செயலாளா் கே.காா்திக் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT