காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தேரோட்டம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரிய திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்தக் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 3- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி ராஜவீதிகளில் பவனி வந்தாா். 7-ஆவது நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான சண்முகப்பெருமான் தேரோட்டமும், தீா்த்தவாரியும் வரும் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மறுநாள் திங்கள்கிழமை ஸ்ரீவள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT