காஞ்சிபுரம்

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி நிறைவு

9th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், 173 பயனாளிகளுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி இந்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (ஜூன் 8) நிறைவு பெற்றது. ஜமாபந்தி நாள்களின்போது 1,054 மனுக்கள் பெறப்பட்டு 173 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. 881 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. ஜமாபந்தி நிறைவு பெற்றதையடுத்து, பெறப்பட்ட 173 மனுக்கள் சாா்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி ரூ. 30,45,750 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். 31 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், 17 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணை, 30 பேருக்கு குடும்ப அட்டைகள், 5 பேருக்கு சலவைப் பெட்டி மற்றும் 5 பேருக்கு தையல் இயந்திரம் உள்பட மொத்தம் 173 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, மக்களவை உறுப்பினா் க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் க.தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் வாலாஜாபாத் வட்டாட்சியா் லோகநாதன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சேகா் உள்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT