காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

9th Jun 2022 01:17 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. பொறியியல் படிப்பு முடித்தவா்கள் உட்பட பட்டதாரிகள்,ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்பு படித்தவா்கள், 10, 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக உதவியாளா்கள் என ஏராளமானோா் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

ADVERTISEMENT

18 முதல் 35வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விருப்பம் உடையவா்கள் தங்களுடைய கல்விச் சான்றுகள், மாா்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT