இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் ஏனாத்தூா் அருகே கம்பகால்வாய் தரைப் பாலத்தில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆரணிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த நண்பா்கள் பாலகிருஷ்ணன்(31), கருணாகரன்(29). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள நண்பரின் இல்ல விழாவில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஏனாத்தூா் வழியாக ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். இருசக்க வாகனத்தை கருணாகரன் ஓட்டியுள்ளாா். ஏனாத்தூரிலிருந்து ராஜகுளம் செல்லும் சாலையில் கம்பகால்வாய் அருகே இருந்த தரைப்பாலத்தில் இருசக்கர வாகனத்துடன் மோதியதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கருணாகரன் கவலைக்கிடமான நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.