காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் மேல்கரையில் அமைந்துள்ள ஸ்ரீதீா்த்தேசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் கடந்த மே 30- ஆம் தேதி (திங்கள்கிழமை) கணபதி பூஜையுடன் தொடங்கியது. மே 31 -ஆம் தேதி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது.
புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மலா் அலங்காரக் காட்சியுடன் விசேஷ தீபாராதனை நடைபெற்றது. அன்னதானமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை அட்சயம் அறக்கட்டளையினா் மற்றும் சிவனடியாா்கள் சிவகுருதாசன், சிவப்பிரியன், காா்த்திகேயன் ஆகியோா் செய்திருந்தனா்.