காஞ்சிபுரம்

சிறாா்களுக்கான மாநில வாள்வீச்சுப் போட்டி

30th Jul 2022 10:25 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான சிறாா் வாள்வீச்சுப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகேயுள்ள அண்ணா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமியா்களுக்கும், சனிக்கிழமை அதே வயதுடைய சிறாா்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன.

சென்னை, நாமக்கல், திருப்பூா், காஞ்சிபுரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறாா்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

தொடக்க விழாவுக்கு வாள்வீச்சுக் கழகத்தின் மாநிலத் தலைவா் சுப்பையா.தனசேகரன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவா் ஆா்.விவேகானந்தன், மாவட்ட பொதுச் செயலா் முருகேசன், மாவட்டப் பொருளாளா் எம்.எஸ்.பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் எம்.மனோகரன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

விழாவில் சுழற்சங்க மாவட்ட ஆளுநா் பி.பரணீதரன், மாநகராட்சி உறுப்பினா்கள் எஸ்.கே.பி.காா்த்திக், கெளதமி திருமாதாசன் ஆகியோா் சிறுமியருக்கான வாள்வீச்சுப் போட்டியைத் தொடக்கி வைத்தனா்.

தமிழகம் முழுவதுமிருந்து 25-க்கும் மேற்பட்ட வாள்வீச்சுப் போட்டி நடுவா்களும், போட்டியாளா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

இரு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவா்கள் விரைவில் நாசிக்கில் நடைபெறும் தேசிய அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவா் என்று சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் முருகேசன் தெரிவித்தாா்.விழாவில் வாள்வீச்சுப் போட்டியாளா்கள் சங்கத்தின் நிறுவனா் விஸ்வநாதன், நீச்சல் பயிற்சியாளா் ஆனந்தன், ஊத்துக்காடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோபு, ஏ.கே.பரசுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT