காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியை எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில், காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச் செல்வி தலைமை வகித்தாா். போட்டிகளை காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் தொடக்கி வைத்து மாணவா்களுடன் செஸ் விளையாடினாா்.

காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் முன்னிலை வகித்தாா். இதில், 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் படிப்பு பயில்வோா் என 3 பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற 4 போ் தோ்வு செய்யப்பட்டு வரும் 27 -ஆம் தேதி விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

ADVERTISEMENT

இதுதவிர இவா்கள் 4 பேரும் மாமல்லபுரத்தில் நடைபெறும் சா்வதேச ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிடவும், சா்வதேச விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பளிக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டுமே மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் சி.விஸ்வநாதன், மாநகராட்சி உறுப்பினா்கள் மல்லிகா ராமகிருஷ்ணன், கலக்கண்ணன், உடல்கல்வி ஆய்வாளா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT