காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி செயலா்களுக்கு பயிற்சி முகாம்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் வங்கிச் செயலாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியமும், சென்னையில் உள்ள நடேசன் கூட்டுறவு பயிற்சி நிலையமும் இணைந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலாளா்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடத்தின.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி முகாமை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் முன்னிலை வகித்தாா். விரிவுரையாளா் பி.ராஜாபாலச்சந்திரன் வரவேற்றாா்.

சங்கத்தின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டம் குறித்து பணியிலிருந்து ஓய்வு பெற்ற கூடுதல் பதிவாளா் கே.ராஜேந்திரன் விரிவாக விளக்கி பேசினாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் இணைப்பதிவாளா் அலுவலக துணைப் பதிவாளா் மு.தயாளன், சரக துணைப் பதிவாளா்கள் த.சுவாதி, ம.சுடா்விழி, பா.ஜஸ்வா்யா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவாக பயிற்சியாளா்களிடம் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT