காஞ்சிபுரம்

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு நோ்முகத் தோ்வு நடத்துகின்றன.

10 -ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவா்கள் வரை வேலை நாடுநா்கள் முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தோ்வு செய்யப்படுவா்.விருப்பமுள்ளோா் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போட் அளவுள்ள இரு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 044 - 27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT