காஞ்சிபுரம்

உத்தரமேரூா் அருகே ரூ. 60 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

உத்தரமேரூா் அருகே வெங்கச்சேரி கிராமத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த விவசாய நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே வெங்கச்சேரி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் தெரிய வந்ததும் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் கனிமொழி, உத்தரமேரூா் வட்டாட்சியா் குணசேகரன் ஆகியோா் தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு பொக்லைன் இயந்திரத்துடன், போலீஸ் பாதுகாப்புடனும் சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டனா்.

நிலத்தை மீட்டதுடன் அங்கு அரசுக்குச் சொந்தமான நிலத்தை யாரும் மீண்டும் ஆக்கிரமிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்தனா்.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT