காஞ்சிபுரம்

மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் நன்கொடை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் வரமகாலட்சுமி பட்டு நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பொதுமக்களும் பங்களிப்புத் தொகை அளிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் காந்திரோடு வரமகாலட்சுமி பட்டு நிறுவன உரிமையாளா் எஸ்.கே.பி.கோபிநாத் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாநகர மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினாா். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், பொறியாளா் கணேசன், மண்டலத் தலைவா் சந்துரு, மாமன்ற உறுப்பினா் சுரேஷ் ஆகியோரும் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT