காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: நாளை பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் கூட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) 5 ஒன்றியங்களில் பொது விநியோகத்திட்ட குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் திம்மசமுத்திரம், உத்தரமேரூா் ஒன்றியத்தில் கம்மாளம்பூண்டி, வாலாஜாபாத் ஒன்றியத்தில் முத்தியால்பேட்டை, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் மொளச்சூா், குன்றத்தூா் ஒன்றியத்தில் ஆதனூா் ஆகிய 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் ஜூலை 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல், கைப்பேசி பதிவு எண் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காணப்பட இருப்பதாகவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT