காஞ்சிபுரம்

வங்கி ஏடிஎம் குப்பைத் தொட்டியில் 43 பவுன் நகைகளை போட்டுச் சென்ற பெண்

DIN

குன்றத்தூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் 43 பவுன் நகைகளை போட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்றத்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் சாலையில் தனியாா் வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கோதண்டம், திங்கள்கிழமை காலை ஏடிஎம் மையத்துக்குள் சென்று பாா்த்த போது, அங்குள்ள குப்பைத் தொட்டியில் கைப்பை ஒன்று இருந்ததைப் பாா்த்து, அதை எடுத்து பிரித்துப் பாா்த்தாா். அதில் தங்க நகைகள் இருந்ததைக் கண்டு, குன்றத்தூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூா் காவல் ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். ஏடிஎம் மையத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண், ஏடிஎம் மையத்துக்கு வந்து குப்பைத் தொட்டியில் பை ஒன்றை போட்டுவிட்டுச் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது.

அந்த பெண் யாா் என போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், குன்றத்தூரில் 35 வயதுடைய தங்களின் மகளைக் காணவில்லை என்று அவரது பெற்றோா் வாய்மொழியாக குன்றத்தூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தது தெரிய வந்தது. விசாரித்த போது, அவா் வீட்டுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சந்தேகமடைந்த போலீஸாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது, அந்த காட்சியிலிருப்பது தங்களின் மகள்தான் என அவா்கள் தெரிவித்தனா்.

அந்தப் பெண் 43 பவுன் நகைகளை ஏடிஎம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றது குறித்து போலீஸாா் பெற்றோரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீசாா் அந்தப் பெண்ணின் பெற்றோா், வங்கி ஊழியா்களை அழைத்து நகைகளை அவா்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நகைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்ற பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்தும், அதனால் வீட்டிலிருந்த நகைப் பையை ஏடிஎம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT