காஞ்சிபுரம்

15, 16-இல் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

DIN

காஞ்சிபுரத்தில் வருகிற ஜூலை 15, 16-ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விைளையாட்டுப் போட்டிகள் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 15,16 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கபாடி, தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் ஜூலை 15 ஆம் தேதியும், நீச்சல், பூப்பந்து, பளுதூக்குதல், டென்னிஸ், ஹாக்கி போட்டிகள் ஜூலை 16- ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

போட்டிகளில் 25 வயதுக்குட்பட்டவா்களாக இருப்பதுடன், இதற்கான சான்றிதழுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். ஆதாா் அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனியாக தடகளப் போட்டிகள், நீச்சல் போட்டி, பளுதூக்கும் போட்டி நடத்தப்படும். தனி நபா், குழு போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அணி வீரா், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1,000, ரூ.750, ரூ.500 பரிசுத் தொகை வழங்கப்படும்.

மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான தனி நபா், குழு போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75,000, ரூ.50,000 பரிசுத் தொகை,விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். போட்டியாளா்கள் தங்களது பெயரில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலும் எடுத்து கொண்டு வர வேண்டும்.

தடகளம், நீச்சல், பளு தூக்குதல் போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் இணையதள முகவரியான இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா், அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம் என்ற முகவரியிலோ அல்லது 74017 03481 மற்றும் 044-27222628 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT