காஞ்சிபுரம்

ஜல்ஜீவன் மிஷன் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

3rd Jul 2022 01:06 AM

ADVERTISEMENT

காட்டரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்றன.

தண்டலம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தணிக்கை கோபி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்துகொண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கி வருவது குறித்தும் இதற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய முன்வைப்பு தொகை மற்றும் பங்கு தொகை குறித்து விளக்கினாா்.

காட்டரம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கோவிந்தம்மாள்தாஸ் தலைமை விகித்தாா். ஊராட்சி செயலா் மகேஷ்வரி உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவகுமாா் தலைமையில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT