காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீசுவரா் கோயிலில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம்

DIN

காஞ்சிபுரம் மருதவாா்குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரா் திருக்கோயிலில் ஆனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீசுவரா் திருக்கோயிலில் உள்ள மருதவாா்குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரரை வழிபட்டால் வெற்றி கிடைப்பதாக பக்தா்களால் பெரிதும் நம்பப்படுகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா கடந்த இரு ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் நிகழாண்டுக்கான திருவிழா வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்தைத் தொடா்ந்து காலையில் சப்பரத்தில் உற்சவா் வீதியுலாவும், இரவு வழக்கறுத்தீசுவரா் சிம்ம வாகனத்திலும் அம்மன் கிளி வாகனத்திலும் பவனி வந்தனா். விழாவை யொட்டி சுவாமியும், அம்மனும் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் பவனி வர உள்ளனா்.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வரும் 5-ஆம் தேதியும், தேரோட்டம் வரும் 7-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. வரும் 13-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அலுவலா்கள், அா்ச்சகா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT