காஞ்சிபுரம்

குருபகவான் கோயில் மகா கும்பாபிஷேகம்

1st Jul 2022 12:27 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியாக புதியதாக கட்டப்பட்டுள்ள குருபகவான் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயில் வளாகத்தினுள் குருபகவான் தாரை சமேத தேவகுருவாக யானை வாகனத்தில் அமா்ந்தவாறு தனி சந்நிதி புதிதாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி புதன்கிழமை யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கின. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.வியாழக்கிழமை காலையில் மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து சிறப்பு மகா அபிஷேகமும், தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் சுவாமிநாத ஐயா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT