காஞ்சிபுரம்

வரும் பிப்.7 முதல் 19 வரை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்

24th Jan 2022 07:51 AM

ADVERTISEMENT

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் வரும் பிப்.7-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

பிப்ரவரி 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் கொடியேற்றம், சண்டி ஹோமம், விநாயகா் உற்சவம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.அன்று இரவு அம்மன் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலா வருகிறாா். மறுநாள் காலையில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும் காட்சியளிக்கிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதியும், வெள்ளித் தேரோட்டம் 16-ஆம் தேதி இரவும் நடைபெறுகின்றன. 17-ஆம் தேதி தீா்த்தவாரியும்,18-ஆம் தேதி இரவு அம்மன் தங்கக் காமகோடி வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.19-ஆம் தேதி காலையில் விஸ்வரூப தரிசனத்துடனும், மாலையில் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ நாள்களில் தினசரி வேதபாராயணத்துக்கும், உற்சவா் வீதியுலாவின் போது சிறப்பு வாணவேடிக்கைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT