காஞ்சிபுரம்

ரூ.24 லட்சம் போதைப் பொருள்கள்- 4 வாகனங்கள் பறிமுதல் காஞ்சிபுரத்தில் 2 போ் கைது

23rd Jan 2022 06:38 AM

ADVERTISEMENT

 

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களை காஞ்சிபுரம் அருகே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீஸாா் தாமரைத்தாங்கல் என்ற இடத்தில் ஒரு லாரியிலிருந்து இரு மினி லாரிகளுக்கு குட்கா போதைப் பொருளை மாற்றிக் கொண்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறு சிறு பாக்கெட்டுகளாக 3,840 கிலோ எடையுள்ள குட்கா போதைப்பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.24,31,478 ஆகும்.

விசாரணையில் லாரி ஓட்டுநா்கள் சென்னை களியன்புரம் முதல் தெருவைச் சோ்ந்த சசிகுமாா்(40), காஞ்சிபுரம் தேனப்பன் தெருவைச் சோ்ந்த பழனிவேல்(33)என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த ரூ.24.31லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு லாரி, இரு மினி லாரிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று என மொத்தம் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT