காஞ்சிபுரம்

பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் பலி

22nd Jan 2022 10:19 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே சின்னையன்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

சென்னை தாம்பரம் மோதிலால் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36). இவரது உறவினா் தாம்பரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் அருளரசன்(27). இருவரும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனா். சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன்சத்திரம் பகுதியில் வந்தபோது, எதிரில் வந்த டிப்பா் லாரி இவா்கள் வந்த பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும், அருளரசன் சென்னை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளா் ராஜகோபால் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT