காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ரெளடி ஹரியாணாவில் கைது

22nd Jan 2022 08:34 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் பிரபல ரெளடியை தனிப்படை போலீஸாா் ஹரியாணாவில் கைது செய்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா்.

காஞ்சிபுரம் நகா் பொய்யாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் தியாகு (எ) தியாகராஜன்(33). இவா் மீது 11 கொலைகள்,15 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 63 குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் ரெளடிகள் அட்டகாசத்தை ஒடுக்க ஏ.டி.எஸ்.பி.வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினருக்கு பயந்து தலைமறைவான தியாகு ஹரியாணா மாநிலத்தில் பரிதாபாத் என்ற இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினா் தியாகுவை பரிதாபாதில் வியாழக்கிழமை சுற்றி வளைத்து கைது செய்தனா். பின்னா், அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து தியாகு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா உள்ளிட்ட அனைத்து வித மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உள்படுத்தப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

தியாகுவை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT