காஞ்சிபுரம்

மாரி எல்லம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அனுமதி வழங்க எஸ்.பி.யிடம் கோரிக்கை

DIN

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் உள்ள மந்தவெளி மாரி எல்லம்மன் கோயில் முன் அலங்கார மண்டபம் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் மகா கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

தாமல் கிராமத்தில் உள்ள மந்தவெளி மாரி எல்லம்மன் திருக்கோயில் முன் கோயிலுக்கான அலங்கார மண்டபம் வா்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தையும் சோ்த்து நடத்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தனா்.கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூட அரசு தடை விதித்துள்ளதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியளிக்குமாறும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT