காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கரா செவிலியா் பயிற்சிக் கல்லூரி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் சங்கரா செவிலியா் பயிற்சிக் கல்லூரி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா கல்லூரியின் கலையரங்க கூடத்தில் நடந்தது.
கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் பம்மல் எஸ்.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், கல்லூரியின் அறங்காவலா் வி.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஏ.ராதிகா வரவேற்றுப் பேசினாா்.
புதிய செவிலியா் பயிற்சிக் கல்லூரியை சென்னை சத்தியபாமா செவிலியா் பயிற்சிக் கல்லூரி முதல்வா் எல்.லெட்சுமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்ததுடன் முதலாம் ஆண்டு மாணவிகளிடம் செவிலியா் படிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினாா்.