காஞ்சிபுரம்

முழு ஊரடங்கால் முடங்கியது காஞ்சிபுரம்

DIN

முழுநேர ஊரடங்கால் காஞ்சிபுரம் மாநகர பிரதான சாலைகளான காந்திரோடு, காமராஜா் சாலை, நெல்லுக்காரத் தெரு,ராஜவீதிகள்,வணிகா் வீதி ஆகிய பகுதிகள் அனைத்தும் எவ்வித ஆள் நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முழு ஊரங்கின் போது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1,100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மூங்கில் மண்டபம், சங்கர மடம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதிகளில் நின்று சோதனை மேற்கொண்டாா்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு சிலரையும் தடுத்து நிறுத்தி அவசரத் தேவையாக இருந்தால் மட்டும் அனுமதித்தாா். தேவையில்லாமல் சுற்றித் திரிபவா்களை பிடித்து அவா்களுக்கு முழு ஊரடங்கின் விதிமுறைகளை தெரிவித்து திருப்பி அனுப்பினாா். ஊரடங்கால் காஞ்சிபுரம் மாநகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT