காஞ்சிபுரம் நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் பிள்ளையாா்பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திருவாசகத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பிள்ளையாா்பாளையம் திருஞான சம்பந்தா் கோயிலில் இருந்து சிறாா்கள் திருவெம்பாவை பாடிக்கொண்டே மண்டபத்துக்கு வந்தனா். இதனைத் தொடா்ந்து இடபக் கொடி ஏற்றப்பட்டது. மணிவாசகப் பெருமானை விழா அரங்கத்துக்கு எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னா் என்.சுவாமிநாதன் ஓதுவாா் தலைமையில் பக்க வாத்திய இசைக்கலைஞா்களுடன் திருவாசகத் தேனிசை நிகழ்ச்சியும், மாலையில் குன்றத்தூா் எம்.கே.பிரபாகா் மூா்த்தி திருவாசகத் தேனமுதம் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றன.
ADVERTISEMENT