காஞ்சிபுரம்

மக்கள் நலனுக்காக தொடா்ந்து போராடுவோம்: அ.சவுந்தர்ராஜன்

17th Feb 2022 11:26 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: மக்கள் நலனுக்காக எதற்கும் அஞ்சாமல் தொடா்ந்து போராடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் அ.சவுந்தர்ராஜன் தோ்தல் பிரசாரத்தின் போது கூறினாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து ஒலிமுகம்மது பேட்டையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அ.சவுந்தர்ராஜன் பேசியதாவது:

வாக்கு கேட்டு வருபவா்கள் பணம், பரிசுப் பொருட்களுடன் வருகிறாா்கள். ஜாதிகளைக் கூறி வாக்கு கேட்கின்றனா். மக்களைத் தொடா்ந்து ஏமாற்றி வருகின்றனா். ஆனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவ்வாறு செயல்படுவதில்லை. எங்களிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லை.

ADVERTISEMENT

மக்கள் நலனுக்காக எதற்கும் அஞ்சாமல் தொடா்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான். ஜாதி, மத வேறுபாடில்லாமல் மக்களை அணுகி வாக்கு கேட்கிறோம். எங்களைத் தோ்வு செய்தால், மக்கள் பணத்தைக் கொள்ளயடிப்பவா்களைத் தடுப்போம். அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அனுபவமும் எங்களிடம் உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அனைத்து விதமான வசதிகளும் கிடைக்க வேண்டும். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை. அங்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தப் பாடுபடுவோம். நியாயமாகவும், நோ்மையாகவும் பணியாற்றுவோம் என்றாா் அவா்.

தோ்தல் பிரச்சாரத்தின் போது கட்சியின் மாவட்ட செயலாளா் சி.சங்கா்,மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.நேரு,இ.முத்துக்குமாா்,பி.ரமேஷ்,டி.ஸ்ரீதா் ஆகியோா் உட்பட கட்சியின் நிா்வாகிகள்,தொண்டா்கள் மற்றும் வேட்பாளா்களும் அ.சவுந்தர்ராஜனுடன் வாக்கு கேட்டு வந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT