காஞ்சிபுரம்

மருத்துவப் படிப்புக்கு தோ்வான அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

11th Feb 2022 02:14 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்புக்கு தோ்வான மாணவியை மாவட்டக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவா் கு.தாரணி (18). இவா், மாநகராட்சி ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தோ்விலும் தோ்ச்சி பெற்றாா்.

இவருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, மாணவி படித்த பள்ளிக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பு.நடராஜன் நேரில் சென்று மாணவி கு.தாரணிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை ந.விஜயகுமாரி உட்பட அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகலில் படித்த 18 போ் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகி உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT