தசைச்சிதைவு ம ற்றும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் மாத உதவித்தொகை பெற வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுகுத்தண்டு வடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிப்பு, மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே மருத்துவச் சான்றிதழ்களுடன் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிப் புத்தக நகல், மன வளா்ச்சி குன்றியவா்களாக இருந்தால் பெற்றோா்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்-1,தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகம், தரைத்தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-29998040 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.