காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எஸ்.எஸ்.கே.வி. பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச் செல்வி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா்கள் பொ.வள்ளிநாயகம், முனி.சுப்புராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் செயலருமான முத்து.பழனிச்சாமி பங்கேற்றுப் பேசினாா்.
பள்ளிகளின் வளா்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குன்றத்தூா் வட்டத்தில் ஊராட்சித் தலைவா்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு தொடா்பான பயிற்சி முகாமையும் அவா் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.