காஞ்சிபுரம்

தேனம்பாக்கம் பள்ளியில் மருத்துவ முகாம்

DIN

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம், செவிலிமேடு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவா்களுக்கு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை மைய அறிவிப்பைத் தொடா்ந்து தேனம்பாக்கம், வெள்ளாக்குளம் பகுதிகளில் குடிசை வீடுகளில் தங்கியிருந்த இருளா் இன மக்கள் 196 போ் தேனம்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, செவிலிமேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த 55 போ் உள்பட மொத்தம் 251 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த இரு இடங்களிலும் தங்கியிருப்பவா்களுக்கு 3 வேளையும் உணவு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டது. தேனம்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ரா.குமரகுருபரன், ஆணையா் ஜி.கண்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் சுரேஷ், எஸ்.சந்துரு, சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், இக்பால், நகரமைப்பு ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT