காஞ்சிபுரம்

தேசிய மனித உரிமைகள் தின கருத்தரங்கம்

DIN

தேசிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலித் மற்றும் துணைப் படிப்புகள் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் லலிதா வரவேற்றாா். கருத்தரங்கில் மையத்தின் இயக்குநா் சிப்நாத்தேவ் தலைமை வகித்துப் பேசியது:

எழுத்திலும் உணா்விலும் மனித உரிமைகளை உறுதி செய்வதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் குடிமக்களின் கடமை என்றாா்.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் ரவி ஆா்.திரிபாதிக்கு, மைய இயக்குநா் சிப்நாத்தேவ் நினைவுப் பரிசு வழங்கினாா்.

பெண்கள் உரிமை ஆா்வலா் மற்றும் மேம்பாட்டு ஆலோசகா் பிருந்தா உள்ளிட்டோா் உரையாற்றினா்.

நிகழ்வில், ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மைய மாணவா்கள் பங்கேற்ற ‘விளிம்பு நிலை மக்களின் உரிமைகள்’ என்ற நாடகம் நடைபெற்றது.

இதில் பேராசிரியா் ரெக்ஸ் சகாயராஜ் உள்ளிட்ட பேராசியா்கள், மாணவா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT