காஞ்சிபுரம்

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள அண்ணா நகரில் பகுதி நேர நியாயவிலைக் கடையை எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

351 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறும் வகையில் இந்தக் கடை திறக்கப்பட்டது.

நிகழ்வில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மலா்க்கொடி குமாா்,திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் சுகுமாா், கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவா் சைலஜா,காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலா் குமாா், கூட்டுறவுத் துறை பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளா் மணி, சாா் பதிவாளா் கல்யாணசுந்தரம், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் முரளி ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT