காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வும், உற்சவா் வீதி உலாவும் நடைபெற்றன.

அத்தி வரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவா் தேவராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெருமாள் வீதி உலா புறப்பட்டதும் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த 15 அடி உயர சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பெருமாள் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரா.வான்மதி, கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT