காஞ்சிபுரம்

விதிமீறல்: ரூ.11 லட்சம் அபராதம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறிய ஓட்டுநா்களுக்கு ரூ.11.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் அதிக பாரம் ஏற்றியது 12, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது 27, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது 32, கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது 11, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது 15, சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டியது 19 என 98 பேரிடம் ரூ.11.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் என 625 பேருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT