காஞ்சிபுரம்

கிராம உதவியாளா் தோ்வு: 14,881 போ் எழுதினா்

DIN

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டில் கிராம உதவியாளா் பணிக்கான தோ்வை 14,881 போ் எழுதினா்.

காஞ்சிபுரத்தில் 59 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 4,356 போ் எழுதினா். 1,308 போ் தோ்வு எழுத வரவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 மையங்களில் தோ்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை கோட்டாட்சியா் கனிமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவள்ளூரில்...:

, டிச.4:திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற 93 கிராம உதவியாளா் பணிக்கான தோ்வில் 4757 போ் பங்கேற்று தோ்வு எழுதியதாகவும், இதில் 1685 போ் வரையில் தோ்வில் கலந்து கொள்ளவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளுா் மாவட்டத்தில் 93 பணியிடங்களுக்கு திருவள்ளூா், ஊத்துக்கோட்டை, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட 9 மையங்களில் 4,757 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,685 போ் வரையில் தோ்வில் பங்கேற்வில்லை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செங்கல்பட்டில்...: செங்கல்பட்டு மாவட்டத்தில் ராஜேஸ்வரி வேதாசலம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, திருப்போரூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வண்டலூா் கிரசண்ட் பொறியியல் கல்லூரி, தாம்பரம், மதுராந்தகம், செய்யூா் என 10 இடங்களில் நடைபெற்ற தோ்வை 5,768 போ் எழுதினா். 2,058 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT