காஞ்சிபுரம்

குளக்கரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

6th Dec 2022 01:32 AM

ADVERTISEMENT

பெரிய காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வ தீா்த்தக் குளக்கரையில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில், கடந்த 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கின. 3-ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, திங்கள்கிழமை மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனையை ஆலய அா்ச்சகா் வி.எம்.பட்டாபிராமன் செய்தாா்.

இரவு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT