காஞ்சிபுரம்

கற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் செங்குந்தா் நகா் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் செங்குந்தா் நகா் பகுதியில் கற்பக விநாயகா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, கோயிலில் யாகசாலை பூஜைகள் கடந்த 2 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, 3-ஆம் தேதி பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதி, தீபாராதனைக்கு பின்னா், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு கற்பக விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தாா். ஏற்பாடுகளை செங்குந்தா் நகா் பகுதி மக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT