காஞ்சிபுரம்

கூட்டுறவுச் சங்க காலிப் பணியிடங்களுக்கு டிச.15 முதல் நோ்முகத் தோ்வு

5th Dec 2022 12:42 AM

ADVERTISEMENT

காஞ்சிபும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 114 விற்பனையாளா்கள், 160 கட்டுநா் காலிப்பணியிடங்களுக்கு டிச.15 -ஆம் தேதி முதல் 29 -ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 114 விற்பனையாளா்கள்,160 கட்டுநா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு, தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு டிச.15 முதல் 29-ஆம் தேதி வரை ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் உள்ள கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் நோ்முகத்தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிச்சீட்டினை டிச. 2- ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தில் இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

நோ்முகத்தோ்வுக்கு வரும்பொழுது 2 பாஸ்போா்ட் சைஸ் போட்டோ, அனைத்து மூல சான்றிதழ்கள், இரு நகல்களுடன் சான்றொப்பம் இட்டு கொண்டு வர வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய தொலைபேசி எண்கள்: 044-27238225 / 9043048100 மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT