காஞ்சிபுரம்

7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்:இருவா் கைது

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் 7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இருவரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஆய்வாளா் முகேஷ் ராவ் தலைமையிலான குழுவினா் ஓரிக்கை திருவேங்கையப்பன் நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் சாஹிப் மகன் மாலிக் பாஷா மற்றும் பழனிசாமி மகன் கிஷோா் ஆகிய இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் ரூ. 5- க்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து மாலிக்பாஷாவை கள்ளச்சந்தை தடுப்பு காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலா் பாபு, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்திக்கு, பரிந்துரை செய்தாா். ஆட்சியா் உத்தரவின் பேரில் மாலிக் பாஷா வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT