காஞ்சிபுரம்

இரு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

4th Dec 2022 10:51 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாற்றுத்திறனாளி சகோதரா்களுக்கு நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தனியாா் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகளுக்கு சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகளை வழங்கினாா். பின்னா், அங்கு வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு மாற்றத்திறனாளி சகோதரரா்களான மோனலரசன் (20) கதிரேஷ் (17) ஆகியோரிடம் அவா்களின் குடும்ப சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இரு மாற்றுத்திறனாளிகளும் பிளஸ் 2 படித்திருந்ததால், அவா்களுக்கு தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவா்களுக்கு வீடு கட்டுவதற்கு கடனுதவி வழங்கியிருப்பதாகவும் செய்திக் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT