காஞ்சிபுரம்

வண்டலூர் அருகே கயிறு அறுந்து விழுந்ததில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் சாவு

3rd Dec 2022 06:31 PM

ADVERTISEMENT

வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி பகுதியில் விடுதலை திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் நடந்து கொண்டிருந்த போது சனிக்கிழமை கயிறு அறுந்து விழுந்ததில் சண்டைப் பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்.

நடிகர் சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படக்காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் இன்று நடந்தது. அப்போது படத்தின் சண்டைப் பயிற்சியாளராக இருந்து வந்த என்.சுரேஷ்(41) திடீரென ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். 

இதையும் படிக்க- காதலனுடன் புது வீட்டுக்கு குடியேறவிருக்கும் பிரியா பவானி சங்கர்!

ADVERTISEMENT

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காது அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT