காஞ்சிபுரம்

சவுடுமண் திருட்டு: 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல் 6 போ் கைது

3rd Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் அருகே சவுடு மண் திருட்டில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்த சோமங்கலம் போலீஸாா் 7 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் சவுத்திரி கால்வாயில் சவுடு மண் திருடுவதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு மணிமங்கலம் உதவி ஆணையா் ரவி தலைமையில் சோமங்கலம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் சோதனையிட்டனா். அப்போது அங்கு மண் திருட்டில் ஈடுபட்ட காட்டரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அரசகுமாா் (29), பழனி (36), மகேந்திரன் (38), சக்திவேல் (42), கோவிந்தராஜ் (51), இருங்காட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (35) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், சவுடு மண் திருட்டுக்கு பயன்படுத்திய 7 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT