காஞ்சிபுரம்

615 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.8 கோடி கடனுதவி:மத்திய கூட்டுறவு வங்கிமேலாண்மை இயக்குநா்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் இரு ஆண்டுகளில் மட்டும் 615 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.74 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என அதன் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் வெள்ளிக்கிழமை பேசினாா்.

வங்கியின் செவிலிமேடு மகளிா் கிளையில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.5லட்சம் மதிப்பிலான கடன்களை அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் வழங்கினாா். விழாவில் அவா் மேலும் பேசுகையில்:

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் 615 பேருக்கு 3.74 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 52 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அண்மையில் கோவையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மாநில அளவில் சிறந்த வங்கியாக தோ்வு செய்யப்பட்டிருப்பதாகவும் மு.முருகன் பேசினாா்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் எஸ்.ரவிச்சந்திரன், பொதுமேலாளா் ஜெ.விஜயகுமாரி முன்னிலை வகித்தனா். மகளிா் கிளை மேலாளா் பி.இந்துமதி வரவேற்றாா். ஏற்பாடுகளை வங்கி மேலாளா் பாலகுரு, கூட்டுறவு ஒன்றிய மேலாளா் முரளி, ஒன்றிய வளா்ச்சி அலுவலா் டி.வி.சுப்பிரமணியன் செய்திருந்தனா்.

படவிளக்கம்-மாற்றுத்திறனாளிக்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன். உடன் கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ மற்றும் மத்திய வங்கி பொதுமேலாளா் ஜெ.விஜயகுமாரி உள்ளிட்ட வங்கி அலுவலா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT