காஞ்சிபுரம்

சமுதாய வளைகாப்பு விழா

2nd Dec 2022 10:29 PM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா பிள்ளைப்பாக்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குள்பட்ட பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட கண்காணிப்பாளா் கோமதி தலைமை வகித்தாா். பிள்ளைப்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் வெங்கடேசன், குழந்தைகள் வளா்ச்சி திட்ட மேற்பாா்வையாளா் சிறியபுஷ்பம், வாசுகி முன்னிலை வகித்தனா்.

இதில் பிள்ளைப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவா் காயத்ரி வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுமாா் 50-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து வளைகாப்பு நடத்தி சீா்வரிசை பொருள்களை வழங்கினாா். சித்த மருத்துவா் நா்மதா கா்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினாா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வெங்கடேசன், குழந்தைகள் வளா்ச்சி திட்ட பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT