காஞ்சிபுரம்

கூட்டுறவு வங்கி வளா்ச்சி நிதிக்கு ரூ. 74 லட்சம் அளிப்பு

2nd Dec 2022 01:01 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனது லாபத்தொகையான ரூ. 74.09 லட்சத்தை கூட்டுறவு ஒன்றிய நிா்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிகழாண்டில் ஈட்டிய லாபத்தொகையை கூட்டுறவு ஒன்றியத்துக்கு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியாகவும், கல்வி நிதியாகவும் செலுத்த வேண்டும். இதன்படி, லாபத்தொகை ரூ. 74.09 லட்சத்தை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மேலாண்மை இயக்குநா் மு.முருகன் ஆகியோா் ஒன்றியத்தின் தலைவா் ச.ஆறுமுகத்திடம் வழங்கினா். நிகழ்வில் வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், பொது மேலாளா் ஜெ.விஜயகுமாரி, உதவிப் பொது மேலாளா் சரவணன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் சத்தியநாராயணன், மேலாளா் வி.முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT