காஞ்சிபுரம்

மாநில அளவில் குண்டு எறிதல் போட்டி: காஞ்சிபுரம் மாணவா் முதலிடம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குண்டு எறிதல் போட்டியில் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா்.இளையபெருமாள் குண்டு எறிதல் மற்றும் வட்டத்தட்டு எறிதல் உள்ளிட்ட இரு போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ாக, அந்தப் பள்ளி முதல்வா் வி.ஷாலினி மேனன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவா் ஆா்.இளையபெருமாள் (17). (படம்). இவா், திருவண்ணாமலையில் நவம்பா் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று வட்டத்தட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். வெற்றி பெற்ற இளையபெருமாளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.மெய்யநாதன் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

பள்ளியின் செயலா் சி.கி.ராமன், மாணவரை வாழ்த்தியதாக முதல்வா் வி.ஷாலினி மேனன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT