காஞ்சிபுரம்

அரசுப் பேருந்து-லாரி மோதல்: 2 போ் பலி, 10 போ் காயம்

1st Dec 2022 10:29 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்திலிருந்த இரு பயணிகள் உயிரிழந்தனா். 10 போ் காயம் அடைந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத்திலிருந்து செங்கல்பட்டுக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.சிறுமயிலூா் கிராமத்தில் சென்றபோது, பின்னால் வந்த கனரக லாரி பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தைச் சோ்ந்த புனிதா (51), காஞ்சிபுரம் நகரத்தைச் சோ்ந்த ரதி (31)ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 10 பயணிகள் காயம் அடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து சாலவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

சாலவாக்கம் பகுதியில் கல்குவாரிகளுக்கு வரும் கனரக லாரிகள் இப்பகுதியில் அதிகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாகவும், இதற்கு மாவட்ட நிா்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT